மூன்றாவது கண்ணால் மூடி கொண்ட கதவு ..! முட்டாள் ஆன A T M - திருடன்..

பெய்ஜிங்: சீனாவில் ஏடிஎம்மின் கதவை திறந்து கொள்ளையடித்த திருடன், கதவு மூடிக்கொண்ட நிலையில், அதை எப்படி திறப்பது என்று தெரியாமல் முழித்ததால் கடைசியில் போலீசில் சிக்கிக்கொண்டான். சீனாவின் ஷாண்டாங் நகரிலுள்ள ஏடிஎம் மையத்துக்கு ஒரு கொள்ளையன் சென்று இருக்கிறான். அந்த ஏடிஎம்மில் யாரும் இல்லாத நிலையில், கதவை பூட்டிவிட்டு வந்த வேலையை பார்ப்போம் என்று திருடன் நினைத்திருந்தான்.



திறக்க முடியவில்லை அதன்படி நைசாக கதவை பூட்டினான் கொள்ளையன். எதிர்பாராதவிதமாக லாக் ஆகிவிட்டது. இதனால் கதவை எப்படி திறப்பது என்று தெரியாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்தான்.



இயந்திரத்தை உடைக்க ஆனால் கொள்ளையனால் நீண்ட நேரம் போராடியும் கதவை திறக்க முடியவில்லை. இதனால் அருகில் குப்பை தொட்டி மூடியை (உலோகம்) எடுத்து ஓங்கி ஓங்கி அடித்து திறக்க முயன்றான் பின்னர் அதே தகடை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரந்தை உடைக்க முயன்றும், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

வங்கி அதிகாரிகள் இன்னொரு பக்கம் எச்சரிக்கை அலாரம் அடித்துக்கொண்ட இருந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பார்த்த வங்கி அதிகாரிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.



இப்போது சிறையில் போலீசார் அங்கு வந்து கொள்ளையைனை கதவை திறந்து மீட்டு கைது செய்து அழைத்துச் சென்றனர். இப்போது கொள்ளையன் சிறையில் இருக்கிறான். இதனிடையே கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.