பாகிஸ்தான் படையினரை சரணடையச் செய்ததன் வெற்றி தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகளும் இன்று மரியாதை செலுத்தினர்.
1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் நிபந்தனையின்றி சரணடைந்தது. இப்போரில் பாகிஸ்தானை இந்தியா வெற்றி கொண்டதன் நினைவாக, ஆண்டுதோறும் டிசம்பர் 16ஆம் தேதி வெற்றி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், விமானப்படை தளபதி திரு. ஆர்.கே.எஸ். பதூரியா, கடற்படை தளபதி அட்மிரல் திரு. கரம்பீர் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு. ஸ்ரீபத் நாயக்கும் இதில் பங்கேற்றார்.